Connect with us

Uncategorized

கைத்துப்பாக்கிகளை கொள்வனவு செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான தடையை அறிமுகப்படுத்த வேண்டும்- கனேடிய பிரதமர்

Published

on

கைத்துப்பாக்கிகளை கொள்வனவு செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான தடையை அறிமுகப்படுத்த வேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் புதிய சட்டத்தை முன்மொழிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, எந்த வகையிலான கைத்துப்பாக்கியையும் கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் என்பனவற்றிற்கு முழுமையான தடை விதிக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் புதிய சட்டத்தினூடாக கைத்துப்பாக்கிகளை வைத்திருக்கின்றமை முழுமையாக தடுக்கப்படாது என்ற போதிலும் கைத்துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதை சட்டவிரோதமாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், கனடாவில் எங்கும் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள பாடசாலையொன்றில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து, கனடாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 21 உயிரிழப்புகள் பதிவாகியிருந்தன.