உள்நாட்டு செய்தி
கடந்த வாரத்தில் மட்டும் 1,102 டெங்கு நோயாளர்கள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் 1,102 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 17,405 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் 8,936 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே பதிவாகியிருந்ததாகவும், கடந்த வருடத்தை விட இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.