Connect with us

உள்நாட்டு செய்தி

தியவண்ணா பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு 40 வருடங்கள் பூர்த்தி

Published

on

இலங்கை பாராளுமன்றம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே இல் உள்ள தற்போதைய கட்டடத்துக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் (29) 40 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.

காலி முகத்திடலில் அமைந்திருந்த பாராளுமன்றக் கட்டடத்தில் போதிய இடவசதி இன்மையால் அதனை வேறொரு இடத்துக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதன் பின்னர் கோட்டே பிரதேசத்தில் பாராளுமன்றத்துக்குப் புதிய கட்டடத்தை அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய 1979ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே பிரதேசத்தில் காணப்பட்ட 16 ஏக்கர் சிறிய தீவில் புதிய பாராளுமன்றக் கட்டடத்துக்கான பணிகள் ஆரம்பமாகின.

1982 ஏப்ரல் 29ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே பகுதியில் அமைக்கப்பட்ட புதிய பாராளுமன்றம் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.

இதற்கமைய அதுவரை காலி முகத்திடலிலிருந்த பாராளுமன்றம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே புதிய கட்டடத்துக்கு கொண்டுவரப்பட்டது.