Connect with us

உள்நாட்டு செய்தி

அவதானம் தேவை – இராணுவத் தளபதி

Published

on

எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானம் தேவை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“யாழில் கொரோனா முதலாவது அலை தாக்கம் ஆரம்பம் முதல் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை வடபகுதி மக்கள் ஒழுக்கமாகவும் நேர்த்தியாகவும் கடைப்பிடிக்கிறார்கள் அதன் காரணமாக முப்படையினர் மற்றும் போலீசார் சுகாதாரப் பகுதியினரால் வடபகுதியில் இலகுவாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடியாததாகவுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெறும் வாரங்கள் எனினும் அந்த காலத்தில்நாட்டில் சில புதிய சுகாதார நடைமுறைகளை நாங்கள் செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அது எவ்வாறான நடைமுறைகள் என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

மக்களை covid தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக மக்களை பாதிக்காதவாறு சில சுகாதார கட்டுப்பாடுகளை எடுக்கவுள்ளோம் அதற்காக அனைவரையும் தனிமைப்படுத்த மாட்டோம் ஆனால் covid தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க முகமாகவே சில நடைமுறைகளை செயற்படுத்தவுள்ளோம்.

ஏனைய நாடுகளோடு ஒப்பிடும்போது இலங்கையை பொறுத்த வரைக்கும் கொரோனாவானது கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கின்றது எனினும் அதனை தொடர்ச்சியாக பேணவேண்டும் அதற்கு பொதுமக்கள் உதவ வேண்டும்.

குறிப்பாக தனிமைப் படுத்தப் பட்டவர்கள் எக்காரணம் கொண்டும் வீடுகளை விட்டு வெளியில் செல்லக் கூடாது அவ்வாறு சென்றால் ஏனையவர்களுக்கும் இலகுவாகப் பரவும் யாழ்ப்பாணத்தில் அவ்வாறு இடம்பெறவில்லை. ஆனால் கொழும்பின் சில இடங்களில் இவ்வாறு நடந்துள்ளது எனவே அவ்வாறானவற்றை தவிர்த்துக்கொள்ள வேண்டும் அத்தோடு எதிர்காலத்தில் நடமாடும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது எதிர்காலத்தில் கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் வாரமளவில் சில புதிய கட்டுப்பாடுகளை நடைமுறை படுத்துவதற்கு எதிர்பார்த்து உள்ளோம்.

தற்போது யாழ் மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாதவாறு இராணுவம் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும்” எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.