உள்நாட்டு செய்தி
லங்கா IOC நிறுவனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பு
லங்கா IOC நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையினை அதிகரித்துள்ளது.
இதன்படி, டீசல் லீற்றர் ஒன்றின் விலை 75 ரூபாவினாலும், பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
லங்கா IOC நிறுவனம் கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி எரிபொருள் விலையினை அதிகரித்தது.
இந்த நிலையில், கடந்த 32 நாட்களில் லங்கா IOC நிறுவனத்தின் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.