உள்நாட்டு செய்தி
கச்சத்தீவு திருவிழா இன்று : வரையறுக்கப்பட்ட பக்தர்களுக்கு அனுமதி
கச்சத்தீவு திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது.
நாளையும் (12) நடைபெறும் இந்த திருவிழாவில் இந்திய பக்தர்கள் 100 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்திய – இலங்கை இடையே கடல் எல்லையான கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் இந்திய-இலங்கை பக்தர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பது வழக்கம்.
இந்திய – இலங்கை பக்தர்களிடையே இணக்கமான உறவை மேம்படுத்த பாரம்பரியமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலால் இந்த திருவிழாவில் பக்தர்கள் அதிகமாக கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த முறையும் வரையறுக்கப்பட்ட இலங்கை-இந்திய பக்தர்களின் பங்குபற்றுதலுடன் திருவிழா நடைபெறவுள்ளது.
இதற்காக இன்று ராமேசுவரம் துறைமுகப் பகுதியில் இருந்து 4 விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டு படகில் 100 பக்தர்கள் கச்சைத் தீவுக்கு வருகைத் தரவுள்ளனர்.