Connect with us

உள்நாட்டு செய்தி

எரிப்பொருட்களின் விலை உயர்வு

Published

on

லங்கா IOC நிறுவனத்தினால் பெற்றோலின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன,

இதன் படி 49 ரூபாவினால் அனைத்து அனைத்து வகை பெற்றோலின் விலைகளும் அதிகரிக்கப்படுவதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது,

ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றோலின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மாத காலத்திற்குள் இரண்டாவது தடவையாக பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் புதிய வலை 303 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் புதிய விலை 332 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது,

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்ததே இந்த முடிவுக்கு காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் டீசல் விலையில் மாற்றம் இல்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.