Sports
குசல் மென்டிஸுக்கு கொவிட்

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மென்டிஸுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.