Sports
இலங்கை T20 அணியின் தலைவராக குசால் பெரேரா நியமனம்

இலங்கையின் T20 அணியின் தலைவராக குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
30 வயதான குசால் பெரேரா, இலங்கை அணிக்காக 22 டெஸ்ட்கள், 104 ஒரு நாள் போட்டிகள், 47 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இங்கிலாந்தில் 3 ஒரு நாள் போட்டிகளிலும் 3 T20 போட்டிகளிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது.
இதற்கான இலங்கை T20 அணியின் தலைவராக குசால் பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் ஜூன் 23 ஆம் திகதியும் T20 தொடர் ஜூன் 29 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.