Connect with us

Sports

இந்திய தொடரை இழந்த குசல்

Published

on

குசல் பெரேரா இந்திய அணியுடனான ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

பயிற்சியின் போது அவரது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்படுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இதன் காரணமாகவே அவர் இந்திய தொடரை இழந்துள்ளார்.

இதேவேளை, வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோர விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியுடனான ஒருநாள் போட்டிகளில் விளையாடமாட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளை உள்ளடக்கிய சர்வதேச T20 தொடரை இம்மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *