இன்றைய தினம் (24) பெரும்பாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என புதிய பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய இன்றைய தினம் பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிலையில்...
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இலங்கையின் இடைக்கால பிரதமராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்தார்.பிரதமர் பதவிக்கு மேலதிகமாக அவருக்கு நீதி,கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், சுகாதாரம், மற்றும் முதலீட்டு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விசாரணைகளின் உண்மைகளை கருத்திற்கொண்டு மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை...
2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைப்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித் பிரேமதாச நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும் அவர், “உங்கள் நம்பிக்கையை என் மீது வைத்த ஒவ்வொருவருக்கும்...
கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று பிற்பகல் (23) வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையை தரிசித்து ஆசி பெற்றார். தலதா மாளிகை வளாகத்தை வந்தடைந்த ஜனாதிபதியை தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல...
தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று...
புதிய ஜனாதிபதி செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்துறையில் கௌரவப் பட்டம் பெற்றுள்ள குமாநாயக்க, ஜப்பானின்...
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உப சரத்து 52 (1) இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக டி.டபிள்யூ. ஆர். பி. செனவிரத்ன...
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 52 (I) பிரிவின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி அநுரகுமார...
முல்லைத்தீவு வெட்டுவாகல் பகுதியில் குழந்தை ஒன்று வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (22.09.2024) இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில 11 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. வட்டுவாகல் பகுதியில்...