உள்நாட்டு செய்தி
தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தை பலி…!
முல்லைத்தீவு வெட்டுவாகல் பகுதியில் குழந்தை ஒன்று வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (22.09.2024) இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில 11 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
வட்டுவாகல் பகுதியில் வீட்டில் குழந்தை தனது தாயுடன் குளியலறையில் இருந்த போது தண்ணீர் நிறைந்த தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கியுள்ள நிலையிலேயே உயிரிழந்துள்ளது.
குறித்த ம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.