Connect with us

இந்திய சினிமா

தளபதி 65 ல் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம்

Published

on

‘தளபதி 65’ படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார்.

‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்துஇ நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாஇ இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர்.


விஜய்க்கு நாயகியாக நடிப்பதற்கு பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தன. விஜயுடன் நடிப்பதற்கு யார் தான் தயக்கம் காட்டுவார்கள்?ஆம் இருவருமே நடித்துவிட வேண்டும் என்று ஆர்வம் காட்டினார்கள்.


இறுதியாகப் படப்பிடிப்பு தேதிகள் அனைத்தும் முடிவானபோதுஇ பூஜா ஹெக்டேவுக்கு அந்த தேதிகள் ப்ரீயாக இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். விரைவில் இதன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவுடன் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *