உலகம்
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. !
சிலி நாட்டின் பொலிவியா எல்லைப் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 2.13 மணிக்கு (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
75 கி.மீ. ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 21.67 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 68.93 டிகிரி மேற்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டு நின்றனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.