Connect with us

முக்கிய செய்தி

பதவிப் பிரமாணம் செய்த பின் புதிய பிரதமர் தகவல்

Published

on

இன்றைய தினம் (24) பெரும்பாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என புதிய பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய இன்றைய தினம் பதவியேற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிலையில் இலங்கையின் 16ஆவது பிரதமராக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் பிரதமர் பதவியை ஏற்றதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டதுடன் கடமைகளை பொறுப்பேற்க வேண்டியுள்ளது.

பின்னர் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும். பெரும்பாலும் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படும்.