மேலும் 2.3 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி தொகையுடன் கூடிய விமானம் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளது. அவற்றுள் சீன இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது
அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர், இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார். கடந்த 20 ஆம் திகதி...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியே 61 இலட்சத்து 57 ஆயிரத்து 629 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19 கோடியே 31 இலட்சத்து 47 ஆயிரத்து 107...
காபூல் விமான நிலைய நுழைவு பகுதியில் உள்ள அமெரிக்கர்கள் அனைவரும் அப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து அந்நாட்டில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள்...
தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகளை செப்டம்பர் 06 ஆம் திகதி வரை தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அனுமதி வழங்கப்பட்டுள்ள தொழிற்துறைக்கு செல்வோர், வீதித் தடைகள் இடப்பட்டுள்ள...
அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவில் பதிவுசெய்யப்பட்டு சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை தபால் மூலம் விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் சுகாதார அமைச்சும் தபால் திணைக்களமும் இணைந்து மீண்டும் ஆரம்பித்துள்ளன. மருந்துகள் தேவைப்படும் நோயாளர்கள் தாம் சிகிச்சை பெற...
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் நவம்பர் மாதம் முடிவடைவதற்கு முன்னர் தடுப்பூசியேற்ற முடியும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கியுபத் தூதுவர் அன்ட்ரெஸ் கரிடொவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இந்த விடயத்தைச்...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற கொரோனா தடுப்பு தேசிய செயலணியுடனான கலந்துரையாடலில் இந்த...
காபூல் விமான நிலையத்தில் நேற்று (26) நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளதாக பொது சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 150-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், காபூல்...
ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பனி மூட்டம் நிலவி வருகிறது. வளைவுகள் நிறைந்த இந்த வீதிகள் மழையுடன் வழுக்கும் நிலை காணப்படுவதால் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகன சாரதிகள்...