உள்நாட்டு செய்தி
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு 40 நாட்களுக்குள் வெளியிடப்படும்..!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை 40 நாட்களுக்குள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக,
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு பணிகள் நேற்று முன்தினம் (08) ஆரம்பமானதாகவும்,
இந்த மதிப்பீட்டு பணிகள் 12 ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.