புரெவி சூறாவளி முல்லைத்தீவு ஊடாக நகர்ந்து மன்னார் ஊடாக இன்று அரபிக்கடலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூறாவளி நாட்டை ஊடறுத்துச் செல்லும் என்பதால் நாட்டில் மினி சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல...
சிறைச்சாலைகள் மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தற்போதைய சூழலில் க.பொ.த.சாதாரண தர பரீட்சையை (O/L) நடத்துவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் நேற்று (29) இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணை நடத்தி தேவையான பரிந்துரைகளை முன்வைக்க ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் 70 க்கும் அதிகமானோர் காயமடைந்து றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகள் 4 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்கவினால் இந்த உத்தரவு...
நேற்றைய தொற்றாளர்கள் – 496நேற்றைய உயிரிழப்பு – 07மொ.உயிரிழப்புகள் – 116மொ.தொற்றாளர்கள் – 23,484மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 19,946இதுவரை குணமடைந்தோர் – 17,002சிகிச்சையில் – 6,366
மஹர சிறைச்சாலை மோதலில் இதுவரை 6 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 37 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அவர் மேலும்...
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் மேலும் மூன்று கைதிகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளளார். கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயற்ற சந்திர்ப்பத்திலேயே சிறைச்சாலை அதிகாரிகளால்...
மஹர சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அங்கு சென்றுள்ளனர்.