நாட்டில் மேலும் ஐவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இதுவரை இலங்கையில் 58 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில் மேலும் 544 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,127 ஆக உயர்வடைந்துள்ளது....