தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 5 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. மாகாண ஆளுநர்களினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பானம் முதல் கொழும்பு கோட்டை வரையான இரயில் சேவை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று மாலை கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறைக்கான முதலாவது ரயில் புறப்படவுள்ளதாக ...
இந்தியத் துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் , வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை நேற்றைய தினம் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அதன் போது , இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி , திட்டங்கள் , ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடினார்கள். குறிப்பாக...
பாதுகாப்பாக காப்பாற்றிய எடுத்த நாட்டை ஒரு போதும் காட்டிக் கொடுக்க போவதில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். அபிமானத்துடன் சௌபாக்கியத்தை நோக்கி என்ற தொனிப்பொருளில் நேற்று (02) ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஐந்தாவது வருட பூர்த்தி பிரதமர்...
T20 உலக கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நேற்றைய 31 ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான்-நமிபியா அணிகள் மோதின இதில் 45 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்...
சீரற்ற காலநிலையால் இதுவரை 1,444 குடும்பங்களைச் சேர்ந்த 5,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்தவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 82 இலட்சத்து 23 ஆயிரத்து 982 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 79 இலட்சத்து 82 ஆயிரத்து 126 பேர் சிகிச்சை...
மலையக மக்கள் தீபாவளி பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் இன்று மலையக நகரங்களில் ஓரளவு சன நெரிசல் காணப்பட்டது. மக்கள் அத்தியவசிய பொருட்களையும், ஆடைகளையும் கொள்வனவு செய்வதில் ஈடுப்பட்டிருந்தனர். ஹட்டன் நகருக்கு இன்று தீபாவளி...
மத்திய மலைநாட்டில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று காலை ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று மதியம் மேலும்...
இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. அவர்களை உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் இலங்கை தமிழர்கள் நலத்திட்ட நிகழவில் உரையாற்றிய போதே தமிழக முதல்வர் இதனை கூறியுள்ளார். தமிழகத்தில்...