Connect with us

உள்நாட்டு செய்தி

வெளியேறியது இந்தியா

Published

on

T20 உலக கிண்ண தொடரில் இருந்து இந்தியா வெற்றியுடன் வெளியேறியது.

நேற்றைய கடைசி லீக் போட்டியில் நமீபியா அணியை இந்திய அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி கொண்டது.

இந்த வெற்றி இந்திய அணிக்கு ஆறுதலாக அமைந்தது.

அண்மையில் நியூசிலாந்திடம் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்ததன் மூலம், இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

ஐந்து லீக் போட்டிகளில் கடைசி மூன்று போட்டிகளில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியுடன் T20 உலக கிண்ண தொடரில் இருந்து இந்தியா வெளியேறியது

இந்த நிலையில், நேற்றுடன் இந்திய அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகினார்.

இந்திய அணி சிறந்த நபரிடம் தான் செல்கிறது எனவும் அந்த நம்பிக்கை உள்ளதாகவும் கோலி நேற்றைய போட்டியின் போது தெரிவித்தார்.