உள்நாட்டு செய்தி
ரம்பொட நகருக்கு அருகாமையில் மண்மேடு சரிந்து விழுந்தது

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் மலையகத்தில் பல இடங்களில் அங்காங்கே பாதைகளிலும் விவசாயகாணிகளிலும் வீடுகளின் அருகிலும் மண்சரிவுகள் ஏற்பட்டு பல சேதங்களை உறுவாக்கி வருகின்றன.
அதன்படி (08) திங்கட்கிழமை காலை 7 மணியளவில் நுவரெலியாவிலிருந்து கண்டிக்கு செல்லும் வழியில் ரம்பொட நகருக்கு அருகாமையில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் போக்கு வரத்து சில மணித்தியாலயங்கள் தடைப்பட்டிருந்தது.
வாகனங்களில் சென்றவர்களும் அப்பிரதேச கிராம மக்களும் இணைந்து சரிந்து விழுந்த மரங்களையும் மண்ணையும் அகற்றி பாதையை துப்பரவு செய்தனர்.
அதன் பின்போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டதும் குறிப்பிடதக்கது.