நாடளாவிய ரீதியில் மண்சரிவு அபாயம் மிக்க சுமார் 20000 இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் (NBRO) தெரிவத்துள்ளது. குறித்த பகுதிகளிலுள்ள சுமார் 15000 குடும்பங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,185 ஆக அதிகரித்துள்ளது.
யாழ். கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த போது, கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சிவன் (வயது 19) எனும் இளைஞனே காணாமல் போன நிலையில் நீண்ட தேடுதலுக்கு...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி நுவரெலியா, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி...
தனக்கும், தனது மனைவிக்கும் எதிராக Pandora Papers இல் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு திருக்குமரன் நடேசன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். தனக்கும், தனது மனைவியான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவுக்கும் சொந்தமான மறைமுக...
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான Ever Ace முதற்தடவையாக இன்று (06) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச முனையத்திற்கு குறித்த கப்பல் வருகை தந்துள்ளதாக துறைமுகங்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. 24...
பண்டோரா பேப்பர் மூலம் இலங்கை குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் இன்று இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். குறித்த...
இன்று (ஒக்டோபர் 06) இலங்கையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது. ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினர் உணரும் விதமாகவும், ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இலங்கையில் வருடந்தோறும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி ஆசிரியர்கள் தினமாக...
இலங்கையின் முக்கிய பிரமுகர்களுடனான இருதரப்பு ஈடுபாடுகளைத் தொடர் இந்து, இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா 2021 அக்டோபர் 5 ஆந் திகதி நிறைவு செய்தார். இந்த 3 நாள் விஜயத்தின் போது, அதிமேதகு ஜனாதிபதி, மாண்புமிகு பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரை வெளியுறவுச் செயலாளர் ஷ்ரிங்லா சந்தித்தார். மாண்புமிகு பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட 4 அபிவிருத்தித் திட்டங்களை ஒப்படைப்பதற்கான மெய்நிகர் ரீதியான அங்குரார்ப்பண வைபவம் இடம்பெற்றது. புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் நான்கு மாடிக் கட்டிடம், வடமராட்சி மகளிர் கல்லூரியில் ஒரு கேட்போர் கூடம், மாத்தளை, நுவரெலியா, பதுளை மற்றும் காலி மாவட்டங்களில் 1,035 கிராமசக்தி வீடுகள் மற்றும் வவுனியா மாவட்டத்தில் மெனிக் பண்ணையில் 24 வீடுகள் ஆகிய கட்டுமானங்களை உள்ளடக்கியுள்ள இந்த அபிவிருத்தித் திட்டங்களின் அங்குரார்ப்பண வைபவத்தில், வெளிநாட்டு அமைச்சர், கல்வி அமைச்சர், பெருந்தோட்ட அமைச்சர், தோட்ட வீட்டுவசதி மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர், சுகாதார அமைச்சர், தொழில் அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த அங்குரார்ப்பண வைபவத்தில், மக்களுக்கிடையிலான இணைப்புக்கள் எமது உறவுகளின் ஒருங்கிணைந்த பகுதியாவதுடன், அதன் விளைவாக 2021 அக்டோபர் 20ஆந் திகதி இடம்பெறவிருக்கும் குஷிநகருக்கான முதலாவது பௌத்த யாத்திரிகர்களின் விமானமானது, இந்தியா – இலங்கை உறவுகளில் ஒரு முக்கிய அடையாளமாக விளங்கும் என வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவின் குஷிநகரில் உள்ள புதிய சர்வதேச விமான நிலையத்துடனான பௌத்த இணைப்பு முயற்சிகளில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவது சிறந்ததொரு வாய்ப்பாகும் என வெளியுறவுச் செயலாளர் ஷ்ரிங்லா வலியுறுத்தினார். இந்திய வெளியுறவுச் செயலாளருக்கும் இலங்கை வெளியுறவுச் செயலாளருக்கும் இடையிலான அதிகாரபூர்வ இருதரப்பு பேச்சுவார்த்தைகள் 2021 அக்டோபர் 20ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சின் குடியரசுக் கட்டிடத்தில் நடைபெற்றதுடன், இதில் இரு நாடுகளும் ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் பரந்த அளவிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலாச்சார விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. ...
நாட்டில் மேலும் 40 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,142 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி ஒக்டோபர் 04...