உள்நாட்டு செய்தி
படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் பலர் உயிரிழப்பு

திருகோணமலை − கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு ஒன்றில் ஆற்றை கடக்க முயன்ற 20 மாணவர்களை ஏற்றிய படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்
படகில் பயணித்த 6 பேர் நீரில் முழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆசிரியர்களையும், மாணவர்களையும் ஏற்றிச் சென்ற படகுபாதையே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிண்ணியா குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.