உள்நாட்டு செய்தி
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ : ஜனாதிபதி செயலணி இன்று முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில்…

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணிகள் இன்று முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்றன.
நேற்று (21) யாழ்ப்பாணம் வலம்புரி மண்டபத்தில் இதற்கானப் பணிகள் இடம்பெற்றன.
பொதுமக்களுக்குச் சட்டத்தை சம அளவில் செயற்படுத்துவது தொடர்பில் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களை கேட்டறிவது, இந்த ஜனாதிபதி செயலணியின் நோக்கமாக உள்ளது.
எதிர்வரும் நாட்களில் ஏனைய எட்டு மாகாணங்களிலும் உள்ள மக்களின் கருத்துக்களை கேட்டறிய எதிர்பார்த்துள்ளதாக செயலணி அறிவித்துள்ளது.