அரசியலமைப்பின் 38 வது சரத்தின் (1) உப சரத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 40 வது சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமைக்கு அமைய பதவியை வறிதாக்கிச் செல்லும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுறாது எஞ்சியுள்ள காலத்துக்கு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். சற்று முன்னர் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பு ஒன்றிலேயே சபாநாயகர் இதனை கூறியுள்ளார். (ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் எனக்கு கிடைத்தது....
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி நாட்டிற்கு மூன்று டீசல் கப்பல்களும் மற்றும் பெற்றோல் ஏற்றிய கப்பல் ஒன்றும் வருகை தரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தலா 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அடங்கிய...
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று (15) பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை இன்று வெளியிடப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூரை சென்றடைந்த ஜனாதிபதி மேற்குறித்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனிப்பட்ட விஜயம்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரை சென்றடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சவுதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான SV-788 என்ற விமானத்தின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு வருகைதரவுள்ள அனைத்து ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிக்கவுள்ள அனைத்து ரயில்களும் சேவையில் ஈடுப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரையில் கொழும்பு மாவட்டத்திற்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என நேற்று கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு சபாநாயகர் மஹித்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.