உள்நாட்டு செய்தி
புதிய அரசியலமைப்பு வரைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும்: பிரதமர் மஹிந்த
புதிய அரசியலமைப்பு வரைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செலவின தலைப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதில் எவ்வித இரகசியமான விடயங்களும் இல்லை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.