உள்நாட்டு செய்தி
ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
ஐக்கிய மக்கள் சக்தி நேற்று கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது சுகாதார வழிக்காட்டிகளை பின்பற்ற தவறியவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு, பால் மா, அரிசி, மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உர தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.