உள்நாட்டு செய்தி
மண் சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
பதுளை, மாத்தளை, புத்தளம், குருணாகல் கேகாலை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களின் 105 பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.