Connect with us

உள்நாட்டு செய்தி

கடும் மழை: நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

Published

on

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தப்போவ, தெதுரு ஓயா, ராஜாங்கன மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால் இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் நான்கு அடி வரையும், ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் ஆறு அடி வரையும் மற்றும் நான்கு வான் கதவுகள் நான்கு அடி வரையும், இரண்டு வான் கதவுகள் இரண்டு அடி வரையும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் ஐந்து அடி வரையும் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இரண்டு அடி வரையும், இரண்டு வீன் கதவுகள் 6 அங்குலம் வரையும் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கடமை நேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குறித்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், தப்போவ, தெதுரு ஓயா, ராஜாங்கன மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களுக்கு அண்டிய தாழ் நிலப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் அந்த அதிகாரி கேட்டுள்ளார்.

மேலும், தொடர்ச்சியாக மழை பெய்தால் குறித்த நீர்த்தேக்கங்களின் மேலதிக வான் கதவுகளும் திறக்கப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.