உள்நாட்டு செய்தி
ஹட்டன் தனியார் வங்கி ஒன்றில் இருந்து ஆறு கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்டு செல்ல முயற்சித்த முன்னாள் இராணுவ சிப்பாய் கைது.

ஹட்டன் தனியார் வங்கி ஒன்றில் இருந்து சுமார் ஆறு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டு செல்ல முயற்சித்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் நுவரெலியா கெப்பெட்டிபொல பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை (01) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை விசேட பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.