உள்நாட்டு செய்தி
ஹட்டன் லெலிஓயா தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

ஹட்டன் லெலிஓயா தோட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தோட்ட நுழைவாயிலில் இன்று (15) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த மாதம் 21 ஆம் திகதி முதல் தமது தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாகவும் அந்த காலப்பகுதியில் அரசாங்கத்தால் எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை என அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ஐய்யாயிரம் ரூபா கொடுப்பனவும் தமக்கு வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தனிமைப்படுத்தப்பட்ட ஏனைய பகுதிகளுக்கு வழங்கிய நிவாரண பொதிகளை தமக்கும் வழங்குமாறு ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தாம் வருமானமின்றி சிரமப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் இன்று (15) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து லெலிஓயா தோட்டம் விடுவிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் ஆர்ப்பாட்டகாரர்களிடம் தெரிவித்தனர்.
எனவே தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தினர்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தோட்ட முகாமையாளர் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டனர்.
வெளிஓயா பகுதியில் 6 ஆயிரம் பேர் வாழ்கின்றனர்.
சுமார் 950 பேர் பெருந்தோட்டத்துறையில் தொழில் புரிகின்றனர்.