உள்நாட்டு செய்தி
சீரற்ற காலநிலை: இதுவரை நான்கு மரணங்கள்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 41 பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்தியய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்க இதனை கூறினார்.
இதுவரை நான்கு மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் 1444 குடும்பங்களைச் சேர்ந்த 5,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியளிக்க தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.