Connect with us

உள்நாட்டு செய்தி

மத்திய மலை நாட்டில் மண்சரிவு அபாயம்

Published

on

மத்திய மலைநாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல இடங்களில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் நிலவி வருகிறது.

நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு நேற்று இரவு தொடர்ச்சியாக மழை பெய்ததால் ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஸ்ரதன் பகுதியில் இன்று (27) காலை 7.30 மணியளவில் மண்திட்டுடன் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததன் காரணமாக சில மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டன.

இதனால் அத்தியசிய சேவையில் ஈடுபடும் வாகன சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

அதனை தொடர்ந்து வீதி போக்குவரத்து அதிகாரசபை மற்றும் பிரதேசவாசிகள், பொலிஸார் இணைந்து வீதியில குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றியதனை தொடர்ந்து போக்குவரத்து வழமைக்கு திரும்பின.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.

எனவே இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.