Sports
கிண்ணத்தை குறி வைக்கும் CSK
IPL தொடரில் நேற்று இரவு நடைப்பெற்ற முதலாவது பிளே ஓப் சுற்றில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக் கொண்டு இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
நேற்றைய போட்டியில், சென்னை நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட்ட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அதனை தொடர்ந்து 173 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது.
இதேவேளை இன்று (11) நடைபெறவுள்ள இரண்டாவது பிளெ ஓப் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் கொல்கொத்தா நைட் ரயிடஸ் (KKR) அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நேற்றைய வெற்றியின் மூலம் 9 ஆவது முறையாக ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நுழைந்துள்ளது.
அதன்படி கடந்த 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதில் 3 முறை (2010, 2011, 2018) சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.
இந்நிலையில், கிங் இஸ் பேக் என RCB கேப்டன் விராட் கோலி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கோலி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கிரிக்கெட்டில் என்றும் தலைசிறந்த பினிஷர். மீண்டும் ஒருமுறை தன்னை துள்ளிக் குதிக்கச் செய்தார் என குறிப்பிட்டுள்ளார்.