Connect with us

Sports

பெங்களூருவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது ராஜஸ்தான்

Published

on

15 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதிச்சுற்று போட்டி அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டு பிளசிஸ் தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தெரிவுச் செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரூ அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி ஜோஸ் பட்லர் 60 பந்துகளில் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்ததன் மூலம் 18.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அந்த அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

நாளை (29) நடைபெறவுள்ள இறுதி போட்டியில் ராஜஸ்தான் (RR) அணி குஜராத் அணியை (GT) எதிர்கொள்கிறது.