Sports
கெய்ல் எடுத்துள்ள அதிரடி முடிவு

கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து கிறிஸ் கெய்ல் விலகியுள்ளார்.
கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மாத்திரமே பிளே-ஓப் சுற்று வாய்ப்பு என்ற நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதள்ளது.
இந்த தீர்மானமிக்க போட்டியில் இருந்து யுனிவர்ஸ் பொஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் விகலியுள்ளார்.
பஞ்சாப் அணி மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது.
இதில் கடைசி இரண்டு போட்டிகளில் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்தார்.
முதல் போட்டியில் 14 ஓட்டங்களையும் 2 ஆவது போட்டியில் 1 ஓட்டத்தையும் எடுத்தார்.
இந்த நிலையில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்ள இருக்கிறது.
இந்த நிலையில் திடீரென ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
இது பற்றி கெய்ல் கூறுகையில்…
“T20 உலகக் கிண்ண போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு உதவுவதற்கு கவனம் செலுத்த விரும்புகிறேன். ஆகவே இதற்கான நேரத்தை கொடுத்த பஞ்சாப் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அணிக்கு என்னுடைய வாழ்த்து மற்றும் நம்பிக்கையை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள்” என்றார்.