உள்நாட்டு செய்தி
சுகாதார ஊழியர்களின் 5 மணித்தியால வேலைநிறுத்த போராட்டம் நிறைவு

சுகாதார ஊழியர்கள் இன்று (27) காலை 7 மணி முதல் 12 மணிவரை 5 மணித்தியால வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
44 தொழிற்சங்கங்கள் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார ஊழியர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக 7500 ரூபா கொவிட் கொடுப்பனவு நிறுத்தப்பட்டமை, உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன் வைத்து இந்த பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.