உள்நாட்டு செய்தி
கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும் – சுகாதார அமைச்சர்

நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் சில கட்டுப்பாடுகளுடன் எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு இன்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சரிடம் நாட்டை திறப்பது குறித்து ஊடகவியலாளர்கள் வினவியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த போதே சுகாதார அமைச்சர் மேற்படி விடயத்தை கூறினார்.
“எதிர்வரும் முதலாம் திகதி நாட்டை திறக்க எதிர்பார்க்கின்றோம். 30 ஆம் திகதியே அது குறித்து தீர்மானிக்க முடியும். சில கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறக்க எதிர்பார்கின்றோம்” என்றார்.
