உள்நாட்டு செய்தி
தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது

நாட்டில் கடந்த 41 நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (01) அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஒகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் நாட்டில் கட்டம் கட்டமாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடதக்கது.