உள்நாட்டு செய்தி
நாடு திறக்கப்படுமா?
எதிர்வரும் திங்கட் கிழமையின் பின்னர் நாட்டை படிப்படியாக திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நம்புவுதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
நான்கு வாரங்களாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் கொவிட் தொற்றாளர்களினதும், கொவிட் மரணங்களும் குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“நான்கு வாரங்கள் போதுமானது. மரணங்களும், தொற்றாளர்களும் குறைவடைவர். இதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் நாடு திறக்கப்படும்என நம்புகின்றேன். நாடு திறக்கப்பட்டால் புதிய வாழ்வியலுக்குள் செல்ல நேரிடும். தடுப்பூசிகளை ஏற்றுவதுடன், உரிய சுகாதார வழிகாட்டல்களுடன் நாடு திறக்கப்படலாம்” என்றார்.