உள்நாட்டு செய்தி
அபிவிருத்தி பணிகளும் தடையின்றி தொடர்கின்றன:நாமல்

கொவிட் தொற்றை ஒழிக்கும் அதே சந்தர்ப்பத்தில் நாட்டின் அபிவிருத்தி பணிகளும் தடையின்றி தொடர்வதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கைக்கு அமைய பொருளாதார மற்றும் அபிவிருத்தி பணிகள் நாட்டில் முடக்கமின்றி தொடர்வதாகவும் அவர் கூறினார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளை பார்வையிடுவதற்காக அமைச்சர் இன்று (10) அங்கு சென்றிருந்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருது;து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.