உள்நாட்டு செய்தி
இராணுவத் தளபதியின் அறிவிப்பு
கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவுள்ள பொதுமக்கள் தங்களுடைய கிராம உத்தியோகத்தர் பிரிவில் அல்லது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் மாத்திரம் அதனை பெற்றுக் கொள்ளுமாறு கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒவ்வொரு பிரதேசத்திற்கும், பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளே வழங்கப்பட்டுள்ளதால், மக்கள் தமது சொந்தப் பிரதேசங்களில் மாத்திரம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
அண்மையில் பல தடுப்பூசி நிலையங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் இராணுவ தளபதி தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாத்திரம் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்கா மற்றும் தியத உயனவில் நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி நிலையங்களில் தங்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.