Connect with us

உலகம்

காபூல் விமான நிலையத்தில் தொடரும் பதற்றம், அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு

Published

on

காபூல் விமான நிலையத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா தமது பிரஜைகளை கேட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் விமான நிலையத்தை தாக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாகவே இது அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய வாயில்களுக்கு வெளியே பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் காணப்படுவதாக அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு தெரிவித்துள்ளது.

காபுல் விமான நிலையத்தில் கைக்குழந்தைகளுடன் அதிகமான பெண்கள் காத்திருப்பதுடன், அவர்கள் குடிக்க நீர் மற்றும் சாப்பிட உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

நேற்றும் சன நெரிசலில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர்.

எனினும் அமெரிக்க படைகள், நேட்டோ படைகள் காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் படைகளும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளன.

இன்றும் விமான நிலையத்தின் வடக்கு வாசல் பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் காபூல் விமான நிலையத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் சுதாரித்துக் கொண்ட அமெரிக்க மற்றும் ஜெர்மனி வீரர்கள் கூட்டாக இணைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.