Connect with us

உள்நாட்டு செய்தி

இசாலினி தங்கியிருந்த அறை சுவரில் எழுதப்பட்டிருந்த முக்கிய வசனம்

Published

on

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில்   தீக்காயங்களுக்குள்ளான நிலையில்  டயகம  சிறுமி உயிரிழந்தமை தொடர்பில்  மேலும் பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அத்துடன் , முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீட்டில்  அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினரால் நேற்று 1 மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கைகளின் போது    மேலும் பல  சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்போது  குறித்த சிறுமி தங்கியிருந்த அறையில் காணப்பட்ட சுவரில்’  என் மரணத்திற்கு காரணமானவர்கள் ‘எனும் வார்த்தை ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த கையெழுத்து  உயிரிழந்த சிறுமியினுடையதா  என்பது தொடர்பில்    ரசாயன பகுப்பாய்வு நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை குறித்த சிறுமி பாடசாலையில் கல்விபயின்ற காலப்பகுதியில் எழுதப்பட்ட அப்பியாசகொப்பிகளில் காணப்படும் கையெழுத்து மற்றும் குறித்த சிறுமி தங்கியிருந்த அறையில் காணப்படும்  கையெழுத்து ஆகியன  தொடர்பில் ரசாயன  பகுப்பாய்வு குழுவினரால்  பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  தெரிவித்துள்ளார்

இந்த நிலையில், குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பொரளை பொலிஸார், கொழும்பு தெற்கு  சிறுவர் மற்றும் மகளிர் விவகார பணியகம் உட்பட குற்றப்புலனாய்வு பிரிவு என்பன விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.