உள்நாட்டு செய்தி
மாணவர்களுக்கு விரைவில் தடுப்பூசி

12 வயதிற்கும் 18 வயதிற்கும் உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கும் பைஸர் தடுப்பூசி வழங்குவது மிகவும் சிறந்தது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் விரைவில் மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.