Connect with us

உள்நாட்டு செய்தி

ஹிஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை நிறைவு

Published

on

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தீக்காயங்களுடன் உயிரிழந்த 16 வயது சிறுமியான ஹிசாலினியின் இரண்டாவது பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளது.

குறித்த சிறுமியின் இரண்டாவது விஷேட வைத்தியர்கள் குழுவினால் இன்று (31) முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.15 மணி வரையில் சுமார் 9 மணிநேரம் இவ்வாறு பிரேத பரிசோதனை இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது சிறுமியின் உடலின் பல்வேறு பாகங்களில் இருந்து பரிசோதனை மாதிரிகளை பெற்று இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவற்றின் முடிவுகள் கிடைத்தவுடன் பிரேத பரிசோதனை அறிக்கையை வௌியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரையில் சிறுமியின் சடலம் பேராதெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.