உள்நாட்டு செய்தி
மழையுடன் கூடிய வானிலை நாளை வரை தொடரும்
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து இன்று மாலை 5 மணி அளவில் வழமைக்கு திரும்பியுள்ளது.
நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை,நாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதுடன், கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வானிலை நாளை (12) பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் என திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.