Connect with us

உள்நாட்டு செய்தி

கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும்

Published

on

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வலுவடைந்துள்ளதால் நாட்டிலும், நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் களினி, கிங், நில்வளா கங்கைகளின் தாழ்நிலப் பகுதிகளில் வௌ்ள நிலைமை ஏற்படலாம் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.