Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளின் கொவிட் நிலவரம்

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 3 லட்சத்து 19 ஆயிரத்து 711 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 35 லட்சத்து 13 ஆயிரத்து 721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 55 கோடியே 3 லட்சத்து 88 ஆயிரத்து 926 பேர் குணமடைந்துள்ளனர்.

173ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 17 ஆயிரத்து 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக இலங்கையில் நேற்று மேலும் 143 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானதால் மொத்த எண்ணிக்கை 665,543 ஆக அதிகரித்தது.

மேலும் 5 கொவிட் மரணங்களும் பதிவானதுடன் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 16,553 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.